தேவூர் அருகே கைகோலபாளையம் பகுதியில் சாலையோரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையிலும், சிமெண்டு கம்பங்கள் முழுவதும் ஆங்கங்கே பெயர்ந்தவாறும் ஆபத்தான டிரான்ஸ்பார்மர் உள்ளது. மேலும் இந்த டிரான்ஸ்பார்மர் ஒட்டியுள்ள சாலை வழியாக பள்ளி மாணவ, மாணவிகள் கிராம மக்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர். எனவே அபாயமான டிரான்ஸ்பார்மரை அகற்றிவிட்டு புதிய டிரான்ஸ்பார்மர் வைக்கப்படுமா? என அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.