ஒளிராத மின்விளக்குகள்

Update: 2026-09-27 14:39 GMT

மதுரை மாவட்டம் மகால் குதிரைலாயத் தெருவில் கடந்த சில வாரங்களாகவே தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள்சூழந்து காணப்படுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இதனால் குற்ற சம்பவங்கள் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்து உள்ள மின்விளக்குகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது. 

மேலும் செய்திகள்