திருப்பத்தூர்-நாட்டறம்பள்ளி சாலையில் தாமலேரி முத்தூர் கூட்ரோட்டில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருக்கின்ற மின்விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பொம்மிக்குப்பம்.