தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்கு முளை ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் போதிய மின்விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. அருகே பஸ் நிறுத்தம் உள்ளதால், பயணிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு பொருத்தவேண்டும்.
பொதுமக்கள், ஆலடிக்குமுளை.