திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா நாச்சிக்குறிச்சி நடுத்தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து உள்ள நிலையில், பொதுமக்கள் நடமாட்டத்தின் போது அப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே நடமாடி வருகின்றனர். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.