விபத்து அபாயம்

Update: 2026-08-09 11:39 GMT

குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறைக்கு செல்லும் சாலையில் திருநந்திக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தபள்ளி வளாகத்தின் வழியாக மின்சார கம்பிகள் செல்கின்றன. இந்த மின்கம்பிகள் பள்ளி வளாகத்தில் நிற்கும் மரங்களில் உரசியபடி செல்கின்றன. இதனால் வேகமாக காற்று வீசும்போது அந்த மரங்களின் மீது மின்சாரம் பாய்ந்து விபத்துகள் ஏற்பட்டு மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி மின்கம்பிக்கு இடையூறாக நிற்கும் மங்களை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

மேலும் செய்திகள்