கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதன் வளாகத்தில் உள்ள பல தெருவிளக்குகள் பழுதாகி ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். இரவில் அத்தியாவசிய தேைவக்கு கூட பாதுகாப்பாக வெளியே சென்றுவர முடியாமல் தவிக்கின்றனர். எனவே பழுதான தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.