ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-02-08 12:29 GMT
கரூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் மெயின் சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது முற்றிலும் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்