ஆரணி தாலுகா கண்ணமங்கலம் பேரூராட்சியில் 2 பஸ் நிறுத்தங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் உள்ளன. அந்த மின் விளக்குகள் பழுது ஏற்பட்டு பல நாட்களாக எரியாமல் உள்ளன. உயர் கோபுர மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.ஆ.தாமோதரன், கண்ணமங்கலம்.