ஆபத்தான மின்பெட்டி

Update: 2026-02-08 12:46 GMT

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனியில் உள்ள திருமகள் 1-வது தெருவில் மின்சார பெட்டி ஒன்று தரைமட்டத்தில் இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர், மின்சார பெட்டியில் படும்படியாக உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குழந்தைகள், முதியர்வகள் வசிப்பதால் அனைவரும் மழைக்காலங்களில் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை உயர்த்தி தரும்மாறு அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்