திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தூர் பலூர் கிராமம் சிவசக்தி கார்டன் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால், இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் சென்று வர பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் சமூகவிரோதிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் போதிய அளவில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.