உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்

Update: 2026-02-08 15:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உயர்கோபுர மின்விளக்கில் ஒரு பல்பு மட்டுமே எரியும் நிலையில் மற்ற பல்புகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாமல் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கில் எரியாமல் உள்ள பல்புகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்