கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பத்தில் கட்ட தடை

Update: 2025-08-11 11:47 GMT

குடியாத்தம் காங்கிரஸ் அவுஸ் ரோடு 2-வது தெரு குறுகலாக உள்ளது. அங்குள்ள மின் கம்பத்தில் கேபிள் டி.வி. ஒயர்களை சுருட்டி வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் மின்கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர். அவைகள் அறுந்து கீழே விழுந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பத்தில் கட்ட தடை விதிக்க வேண்டும்.

-குமார், குடியாத்தம்.

மேலும் செய்திகள்