பழனியை அடுத்த கோதைமங்கலம் ஊராட்சி அரிமாநகரில் பொதுப்பாதையில் மக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக மண், கற்களை சிலர் குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மண் குவியலை உடனே அகற்ற வேண்டும்.