கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்த்கேம்ப் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை கட்டிடம் இடியும் அபாயத்தில் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் மோசமான நிலைக்கு சென்று வருகிறது. எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.