கோவை சிங்காநல்லூர் அஸ்தாதிர நாயக்கர் வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை துர்வாரிவிட்டு கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டனர். அதில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. அத்துடன் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குவித்து வைக்கப்பட்டு உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.