பென்னாகரம் பஸ் நிலையம் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 3 மாதங்களாக பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழையும் இடத்தில் மழைநீர் வெளியேற்றுவதற்காக சிறிய அளவில் குழிகள் தோண்டப்பட்டது. அதற்கு முறையான மாற்று வசதிகள் செய்யாததால் பஸ் நிலையம் உள்ளே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றன. எனவே பஸ்கள் நுழையும் இடத்தில் தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அருண்குமார், ரங்காபுரம்.