வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் புதிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையின்போது மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் திரு.வி.க. நகர் செல்லும் குறுகிய தெருபகுதியில் இரும்பு தகடுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த இரும்பு தகடுகள் காற்றில் விழுந்துவிடும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிமாறன், பேரணாம்பட்டு.