திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். புதிய பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் தேரடி பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இரவில் மின் வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுவை ஒழிக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,திருவாரூர்.