பெங்களூரு சங்கராபுரம் மெயின் ரோட்டில் சிருங்கேரி மடம் உள்ளது. இந்த மடத்தின் எதிரே உள்ள சாலையில் நடைபாதை கடந்த சில மாதங்களாக உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மடத்திற்கு வரும் பக்தர்கள் அந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. நடைபாதையை அதிகாரிகள் சீரமைத்தால் மடத்திற்கு வருபவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.