திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஓவரூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகின்றன. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓவரூர் பகுதியில் தொல்லை கொடுத்து வரும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஓவரூர்
======================