தெருநாய்கள் தொல்லை

Update: 2022-07-25 15:42 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் அகசிப்பள்ளி தேவசமுத்திரம் பஞ்சாயத்து முல்லை நகர் அக்ரகாரம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவு உள்ளது. சாலையில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் சாலையில் செல்லவே அந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த நாய்களுக்கு கருத்தடை செய்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-சுப்ரமணி, தேவசமுத்திரம்.

மேலும் செய்திகள்