முட்புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-07-25 15:31 GMT

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அண்ணாமலைஅள்ளி ஊராட்சியில் பாலக்கோடு மெயின் ரோட்டில் இருபுறமும் முட்புதர்கள் காணப்படுகிறது. இந்த பகுதிக்கு பள்ளி வாகனங்கள் காலை, மாலை இருவேளையும் வந்து செல்கின்றன. அப்போது வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒதுங்க போதிய இடவசதி இல்லை. எனவே அதிகாரிகள் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், தர்மபுரி.

மேலும் செய்திகள்