புதருக்குள் அரசு அலுவலகம்

Update: 2023-09-10 12:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி ரோட்டில் உள்ள துணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரப்பதிவு செய்ய நாள்தோறும் பொதுமக்கள் வருகின்றனர். இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர் உட்புறத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் ஏராளமான பாம்புகளும், விஷப்பூச்சிகளும் நடமாடுகின்றன. எனவே இந்த செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குணா, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்