கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் காந்தி சிலை உள்ளது. வார வாரம் வெள்ளிக்கிழமைதோறும் காந்திசிலை முன்பு 3 மாநில விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெற்று வருகிறது. காந்தியின் உருவ சிலையில் இடது கை உடைந்து பல மாதங்கள் ஆகிறது. எனவே இந்த சிலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சூர்யா, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.