பெங்களூரு ஹெப்பால் மனோரன்யபாளையா 2-வது பி கிராஸ் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் உடைந்து இருந்தனர். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் ஹெப்பால் போலீஸ், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கண்காணிப்பு கேமரா இல்லாததால் இரவில் சட்டவிரோத சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க உடைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவை அகற்றிவிட்டு புதிய கண்காணிப்பு கேமரா பொருத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.