பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-08-27 09:36 GMT

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் தாறுமாறாக இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்களுக்கு கடும் அவதி ஏற்படுகிறது. குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் தெற்குபுறம் கடைகள் அமைந்துள்ள பக்கவாட்டு பகுதியில் செல்லும் வழியை அடைத்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

மயான வசதி