கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் உள்ள மினி விதான சவுதா அருகே தெலுங்கு படத்தின் ஆபாச சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி மிகவும் ஆபாசமாகவும், முகம் சுழிக்கும் வகையிலும் உள்ளது. தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பெண்கள் அந்த வழியாக சென்று வருகிறார்கள்.
இதுபோன்ற சுவரொட்டிகள் மாணவ-மாணவிகளை தவறான பாதையில் செல்ல வழி வகுக்கும். இதனால் சமுதாயத்தை சீர்கெடுக்கும் இதுபோன்ற ஆபாச சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி வழங்கக்கூடாது.