பெங்களூரு காட்டன்பேட்டை மெயின் ரோட்டில், கடந்த சில நாட்களாக மாடுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளினால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்து கிடக்கின்றன. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.