பயன் பெறுமா? தடுப்பணைகள்

Update: 2023-08-20 17:34 GMT

திருச்சி மாவட்ட வனத்துறையினரால் செங்காட்டுப்பட்டி விஸ்தரிப்பு வெங்கடாசலபுரம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் சுமார் 16 லட்சம் ரூபாய் செலவில் இரு கசிவு நீர் குட்டை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பேச்சு பொருளாகியுள்ளது. வெங்கடாசலபுரத்தை ஒட்டியுள்ள பச்சைமலை அடிவாரப் பகுதியில் வரும் வடிநீர், கசிவு நீர் தேக்கத்திற்காகவும், வனவிலங்குகளின் நீராதாரத்திற்காகவும் கட்டுப்பட்டுள்ள இத்தடுப்பணைகள், மழைகாலங்களில் வரும் காட்டாற்று வெள்ள நீரை தடுத்து சேமித்து வைக்க பயனுள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு தடுப்பணையின் ஒரு பக்க தடுப்புச்சுவர் கட்டப்படாமலும், மற்றொரு தடுப்பணையின் அமைப்பு கேலிக்குரியதாகவும் அமைந்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்