வேகத்தடை ேவண்டும்

Update: 2022-07-25 09:55 GMT
ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள வாழக்கரை அம்மன் கோவில் தெருவில் இருந்து, பழைய பஸ் நிலையம் அமைந்துள்ள பிரதான சாலையான சென்னை-கிருஷ்ணகிரி சாலைக்கு வரும், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். காரணம் கிருஷ்ணகிரி சாலை வழியாக ஆற்காடு, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும், இதர வாகனங்களும் சென்று கொண்டே இருப்பதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இச்சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவலகம் அருகே ஒரு வேகத்தடையை அமைத்துத் தந்தால் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

மேலும் செய்திகள்