ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் டாக்டர்கள் இல்லை. நர்சுகள் முதலுதவி அளித்து, சோளிங்கர் அல்லது வாலாஜா மருத்துவமனைகளுக்கு பரிந்துரை கடிதம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். இதனால் அவசர சிகிச்சை பெறும் நோயாளிகள், புறநோயாளிகள், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணிக்கு ஒரு டாக்டரை நியமிக்க வேண்டும்.
-சுதாகர், கூத்தம்பாக்கம்.