ஓசூர் வைஷ்ணவிநகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமானோர் நடைபயிற்சி செய்யவும், பொழுதுபோக்குக்காகவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பூங்காவின் பின்பக்கம் சுற்றுசுவர் இல்லாமல் திறந்தவெளியாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு சுற்றுசுவர் அமைத்து பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரியன், ஓசூர்.