தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உராமகொண்ட அள்ளி ஊராட்சி புதுச்சோளபாடியில் அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
-அன்பு, ஏரியூர்.