கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு தினமும் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் வங்கியில் போதிய கவுண்ட்டர்கள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் அதிக நேரம் செலவாகிறது. எனவே வாடிக்கையாளர்்கள் நலன்கருதி வங்கியில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க வேண்டும்.
-சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.