கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான பழைய குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு கட்டிடங்கள் நீண்டகாலமாக காலியாகவும், இடிந்துவிழும் நிலையிலும் மோசமாக காட்சி அளிக்கின்றன. இவற்றை சீரமைத்தோ அல்லது இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டியோ அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பாபு, ஓசூர்.