கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே தர்கா பகுதியில் சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் படர்ந்து ஏரி நீரே, கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பரவி உள்ளது. இதனால் ஏரிநீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே ஏரியில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றி ஏரிநீர் மாசு அடையாமல் பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி. ஓசூர்.