கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பசுமாடுகளும், ஆடுகளும் சுற்றி திரிகின்றன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. எனவே இந்த கால்நடைகளை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மஞ்சுநாத், ஓசூர்