நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-24 12:41 GMT
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு தின்னகழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் கோழி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன . இரவு நேரத்தில் கோழி கழிவுகளை சாக்குமூட்டைகளில் கட்டி வாகனங்களில் எடுத்து வந்து இந்த பகுதியில் கொட்டி செல்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.  இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

-திம்மராஜ், கிருஷ்ணகிரி

மேலும் செய்திகள்