சேலம் ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து சேலத்தாம்பட்டிக்கு செல்லும் சாலையில் குடிநீர் தொட்டி உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் தொட்டியை சுற்றி குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. மேலும் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் சுகாதாரமற்ற நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, செடி, கொடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
-மூர்த்தி, ஆண்டிப்பட்டி, சேலம்.