சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வந்து செல்கின்றனர். அங்கு வரும் பொது மக்களுக்கு இருக்கை வசதி எதுவும் இல்லை. இதனால் அவர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சதீஷ்குமார், சூரமங்கலம்.