கிருஷ்ணகிரி நகரில் ஐந்து ரோடு ரவுண்டானாவில் இருந்து காந்திரோடு, சென்னை சாலை, சேலம் சாலை, சப்-ஜெயில் சாலை, பெங்களூர் சாலை ஆகிய முக்கிய சாலைகள் செல்கின்றன. இந்த பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. சாலையில் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. எனவே இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்னீஸ், கிருஷ்ணகிரி.