கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி கல்லாவி சாலை அருகே ஸ்டேட் பேங்க் எதிரில் புளியமரத்தை ஒட்டி உயர் மின்னழுத்த கம்பி செல்கிறது. இது ஊத்தங்கரை முதல் கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் மின்சார அதிகாரிகளும் மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரவி, கிருஷ்ணகிரி.