கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகில் ஹவுசிங்போர்டில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். எனவே அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.