கதவனை சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-14 12:11 GMT


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர் வழியாக குடமுருட்டி ஆறு செல்கிறது. இதன்மூலம் கண்டியூர் ரெட்டைகோவில் ,அரசூர், செங்கமேடு, ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் ரெட்டை கோவில் வாய்க்கால் மதகில் ஷட்டர் (கதவனை)பழுதாகி உள்ளது. இதனால் தண்ணீர் வருவது மிகவும் சிரமாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மதகின் ஷட்டரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவையாறு

மேலும் செய்திகள்