கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஒமதேபள்ளி பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு மது குடிக்க வருபவர்கள் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை அப்பகுதியிலேயே போட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு, கன்றுகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, ஒமதேப்பள்ளி, சூளகிரி.