கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் தாசில்தார் அலுவலகம் மற்றும் கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிவதுடன், காய்கறி குப்பைகளை சாலையில் சிதறடித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும், அலுவலர்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இவ்வாறு கால்நடைகளை சுற்றித்திரியவிடும் அதன் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.