நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் செம்மாண்டப்பட்டி ஊராட்சி காணாம்பாளையம் குடித்தெரு பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பயன்படாத வகையில் புதர் மண்டி கிடக்கிறது. இப்பகுதி குழந்தைகள் விளையாடுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மீண்டும் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-வீரா, வெண்ணந்தூர்.