நடைபாதையில் குவிந்து கிடக்கும் கட்டுமான பொருட்கள்

Update: 2022-07-22 15:30 GMT

பெங்களூரு குமர குருபரர் சாலையில் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதிக்கு அருகில் உள்ள நடைபாதையை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபாதை அருகில் கட்டுமான பணிகள் தொடங்கியது. அந்த பணி தற்போதும் நடைபெற்று வருகிறது.

இதனால் அதன் அருகில் உள்ள நடைபாதையில் கற்கள், மணல் , பலகை போன்ற கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்