நாகைமாவட்டம் தலை ஞாயிறு ஒன்றியம் மணக்குடியில் சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ளது. மேலும் கட்டிடம் புதுப்பிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையம் செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மணக்குடி